» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரதம மந்திரியின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:43:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில், 2025-26 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி.வ) மிகப்பிற்படுத்தப்பட்ட (மி.ப.வ) / சீர்மரபினர் (சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டம் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

I. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவ/மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

II. இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 

2025-26 ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, மாணவ/மாணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள UMIS (University Management Information System) எண் மூலம் https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Institution Nodal Officer) அணுகி, https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெற மாணாக்கர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 31.12.2025 ஆகும்.

கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory