» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 17ம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்

வியாழன் 11, டிசம்பர் 2025 10:13:19 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வருகிற 17ஆம்தேதி முதல் 26ம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் ஒரு வார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது. 

இவ்வாண்டு ஆட்சிமொழிச் சட்ட வாரம் 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஒருவார காலம் நடைபெற உள்ளது.

ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவின் இரண்டாம் நாளான 18.12.2025 அன்று அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வுப் பேரணி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கி முத்து நகர் கடற்கரையில் நிறைவடைய உள்ளது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் ஆட்சிமொழிச்சட்டம் தொடர்பான பட்டிமன்றம், அரசு பணியாளர்களுக்கு கணினிப் பயிற்சி, மின்காட்சியுரை, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற உள்ளன. அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தினை நினைவு கூரும் வகையில் ஒட்டுவில்லைகள் ஒட்டியும் துண்டறிக்கைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பது தொடர்பான அரசாணை வழங்கியும் கொண்டாடப்படும்.

மேலும், தொழிலாளர் துறையுடன் இணைந்து வணிகநிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தி வணிகநிறுவன உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவன அமைப்புகளைக் கொண்டு கூட்டம் நடத்தப்பெறும். இதுதவிர கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெறும் ஆட்சிமொழிப் பட்டிமன்றம், பொதுமக்கள், தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory