» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்

வியாழன் 11, டிசம்பர் 2025 3:18:36 PM (IST)

தமிழக அரசின் 2026 ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

2026 ஆம் ஆண்டிற்கான ”கபீர் புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது தகுதியுடைய நபர்களுக்கு தலா ரூ.20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/- வீதம் வழங்கப்படுகிறது. 

விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர்.

மேலும் இவ்விருதானது ஒரு இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது வீரம் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் 15.12.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் அதற்கு பின்னர் தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory