» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உலக மண்வள தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
வெள்ளி 5, டிசம்பர் 2025 5:52:43 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு "ஆரோக்கியமான நகரங்களுக்கு ஆரோக்கியமான மண்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நீர்வளச் சூழலியல் மேலாண்மை துறையின் உதவி பேராசிரியர் மற்றும் துறை தலைவர் (பொ) து. மணிமேகலை தனது வரவேற்புரையில் மண்வள பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கல்லூரியின் முதல்வர் (பொ) சா. ஆதித்தன் மண் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
மண் தினத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தும் வகையில் "மண் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. மேலும் ஆங்கிலக்கட்டுரை போட்டி, தமிழ் கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது. உதவிபேராசிரியர் அ. ஜுலியட் செல்வராணி நன்றியுரை வழங்கினார். மேலும், உதவிபேராசிரியர் ஸ்ரீ. சக்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இறுதியில் வெற்றியாளர்களுக்கு சான்றிதல் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் போட்டோகிராபர் பலி
வெள்ளி 5, டிசம்பர் 2025 5:14:18 PM (IST)

குடிநீர் குழாய் உடைந்து பிரதான சாலையில் வெள்ளம் : தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:33:54 PM (IST)

தூத்துக்குடியில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)










