» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)
தூத்துக்குடியில் சாலையில் மாடு குறுக்கே வந்ததால் நிகழ்ந்த பைக் விபத்தில் பலத்த காயம் அடைந்த பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அண்ணா நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் பூபால் மகன் சேகர் (58), பால் வியாபாரி. இவர் கடந்த 29ம் தேதி இரவு 9 மணியளவில் மீளவிட்டான் அருகே பண்டாரம்பட்டி - சில்வர்புரம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே மாடு வந்ததால் பைக் விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயம் அடைந்த சேகர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் போட்டோகிராபர் பலி
வெள்ளி 5, டிசம்பர் 2025 5:14:18 PM (IST)

குடிநீர் குழாய் உடைந்து பிரதான சாலையில் வெள்ளம் : தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:33:54 PM (IST)

தூத்துக்குடியில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)










