» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி அண்ணா நகர் டூவிபுரம் சந்திப்பில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அம்பேத்கர்நகர் முத்தையாபுரம் சந்திப்பிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் மில்லை ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, முருகேசன், துணை செயலாளர்கள் பொன்ராஜ், சகாயராஜ், வடக்கு மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓபிஎஸ் அணி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி ஓ.பி.எஸ் அணி சார்பில், மாநகர் மாவட்ட அலுவலகம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் போட்டோகிராபர் பலி
வெள்ளி 5, டிசம்பர் 2025 5:14:18 PM (IST)

குடிநீர் குழாய் உடைந்து பிரதான சாலையில் வெள்ளம் : தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:33:54 PM (IST)

தூத்துக்குடியில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)










