» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தூத்துக்குடியில், பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மண்டல் சார்பாக முத்தையாபுரம் பல்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் மண்டல் தலைவர் மாதவன், கிழக்கு மண்டல் பிராபாரி சத்தியசீலன், மாவட்டத் துணைத் தலைவர் மாசாணம், மாவட்ட பொருளாளர் பரமசிவம், பிரிவு தலைவர் சின்ன தங்கம், சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு மாவட்ட பாஜக சார்பில் கேடிசி நகர் வெங்கடேஸ்வரா டீக்கடை ஜங்ஷன் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் & ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வீரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டியில்
கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு பாஜக சார்பில் நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக வடக்கு மாவட்ட பொருளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்ராஜ், வக்கீல் பிரிவு மாவட்டத் தலைவர் நீதிப்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்ட பாஜக தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் போட்டோகிராபர் பலி
வெள்ளி 5, டிசம்பர் 2025 5:14:18 PM (IST)

குடிநீர் குழாய் உடைந்து பிரதான சாலையில் வெள்ளம் : தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:33:54 PM (IST)

தூத்துக்குடியில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)










