» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கனமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு
வியாழன் 16, மே 2024 10:11:54 AM (IST)
கனமழையை எதிர்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து பல்வேறு பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகரத்தில் ஏற்கனவே பக்கிள் ஓடை இருந்தாலும் புதிய வழித்தடங்களான மீன்வளக் கல்லூரி முதல் புறவழிச் சாலை வரை, சங்கரப்பேரி விலக்கில் இருந்து ஓடை வரை, பெல் ஹோட்டல் முன்பு, சவேரியாணா அருகில், ஸ்டேட் பாங்க் காலனி முதல் திரேஸ்புரம் வரை, செல்சீனி காலனியில் இருந்து அன்னம்மாள் கல்லூரி வழியாகவும், கருணாநிதி நகர் இனைக்கும் சாலை, முத்து நகர் கடற்கரை வழியாக என தற்பொழுது புதிய வடிகால் பணிகள் நிறைவுற்றுள்ளன.
ஆகவே மாநகர மக்கள் எந்தவித ஐயமும் கொள்ள வேண்டாம் என்றும் மாநகராட்சி நிர்வாகமானது தயார் நிலையில் இருக்கின்றது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மார்க்கண்டேயன்மே 18, 2024 - 09:05:36 PM | Posted IP 172.7*****
கருத்தபாலம் வேலை நடைபெறாமல் உள்ள நிலையில் தண்ணீர் எப்படி ஓடையில் வெளியேறும். பாலத்தை தோண்டிய பிறகு எந்த ஒரு வேலையையும் நடைபெறவில்லை.
அப்பாவிமே 17, 2024 - 05:57:27 PM | Posted IP 172.7*****
இங்கு சரியில்லை நா அங்கு வேலை பார்ப்பாராம் , அங்கு சரியில்லை நா இங்கு வேலை பார்ப்பாராம்
Ananthanathanமே 17, 2024 - 10:41:08 AM | Posted IP 172.7*****
வாய திறந்தாலே பொய்தானே 🦁🦁
Sornapandianமே 17, 2024 - 08:48:31 AM | Posted IP 162.1*****
முதலில் உப்பாற்று ஓடை பாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யுங்கள்
Sornapandianமே 17, 2024 - 08:47:06 AM | Posted IP 162.1*****
உப்பாற்று ஓடையில் உள்ள அடைப்பை இன்னும் சரி செய்யப்படவில்லை. இதில் மழை வெள்ளத்திற்கு தயார் நிலையில் இருக்கிறார்களாம். வெள்ளம் வந்தால் தெரியும் லட்சணம்.
Manoharமே 16, 2024 - 02:46:44 PM | Posted IP 172.7*****
மாப்பிள்ளையூரணி பகுதியை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது? கடந்த ஜனவரி மாதம் வெள்ளம் வடிந்த பின்னர், பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகள் எதுவும் நடைபெறாமல் மொத்த நிர்வாகமும் முடங்கியுள்ளது.
சாமிமே 16, 2024 - 12:49:11 PM | Posted IP 162.1*****
இருக்கிற சிமெண்ட் சாலைகளில் தேங்கி இருக்கும் மணல், மண் அடைப்பை சுத்தப்படுத்த தெரியவில்லை, ஆங்காங்கே கால்வாய்களில் அடைப்பு அதுலயும் சரி பண்ண தெரியவில்லை. இனி கனமழை வரும்போது தான் தெரியும்.
RAJAமே 16, 2024 - 11:55:04 AM | Posted IP 162.1*****
IN SPG KOIL FOURTH STREET (NEAR ST PETERS CHURCH) SEWAGE IS VERY WORST..PLS CHECK AND IMMEDIATE SOLUTION..AT THE TIME OF RAIN, ALL SEWAGE WATERS ARE ENTER INTO HOUSE..MANY YEARS SAME PROBLEM THERE
Ttnvellaramமே 18, 2024 - 11:59:51 PM | Posted IP 162.1*****