» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாரா விளையாட்டு சங்கம் சார்பாக தீபாவளி விழா
வியாழன் 31, அக்டோபர் 2024 8:57:58 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்னைகளுக்கு தீபாவளி இனிப்பு வழங்கும் விழா அன்னதாய் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்வை பயிற்சியாளர் மற்றும் பாரா சங்கச் செயலாளர் திரு ஸ்டீபன் ஒருங்கிணைப்பு செய்தார். மாற்றுத் திறனாளி சங்கம துணை தலைவர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ் கலந்து கொண்டு வீரர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர் அண்ணத்தாய் திருமண மண்டபம் உரிமையாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை கலந்து கொண்டு வீரர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் முஹம்மது நசீர் அனைவருக்கும் இனிப்புகள் வாங்கிக் கொடுத்தார். துணைத் தலைவர் கான்ஸ்டன்ட், துணைச் செயலாளர் ஜெயலட்சுமி, பொருளாளர் நீல ராஜன், ஈசி மெம்பர் ரிகானா பர்வீன், நாகேஸ்வரி, அஜீஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டிப்னா சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி எட்வின் கலந்துகொண்டார். அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.