» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குப்பைகளை அகற்றாததால் மழைநீர் தேங்கி அவலம் : பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு
வியாழன் 16, மே 2024 10:06:48 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக பிரமுகர் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட விவிடி ரோட்டில் 30வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பல மாதங்களாக தெருக்களில் கிடக்கும் குப்பையை முறையாக மாநகராட்சி நிர்வாகம் அகற்றவில்லை. மேலும் நேற்று பெய்த கனமழையால் மழைநீரு் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் நடைபாதையில் செல்லும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏரியா காரன்மே 16, 2024 - 11:54:41 AM | Posted IP 162.1*****