» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமத்துவ மக்கள் கழகம் இறுதி கட்ட பிரச்சாரம்

புதன் 17, ஏப்ரல் 2024 3:24:21 PM (IST)



தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொண்டனர். 
 
தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வெற்றி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் தூத்துக்குடி வேலவன் ஹைபர் மார்க்கெட் அதிபர் ஆனந்த்ஐ சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினர். 

அதனைத் தொடர்ந்து ஹைபர் மார்க்கெட்டிற்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்த 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குகள் சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ், டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்டத் துணைச் செயலாளர் சூசைமுத்து, மாவட்ட பிரதிநிதி பெரியசாமி மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory