» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இரத்த தானம் முகாம்

திங்கள் 29, ஏப்ரல் 2024 5:14:43 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உடல்நல பரிசோதனை மற்றும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உடல்நலப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக 146 மாணவர்களுக்கு உடல்பரிசோதனை நடைபெற்றது. இதில் 2 மருத்துவர்கள் மற்றும் 8 செவிலியர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். கல்லூரியின் முதல்வர் ப. அகிலன்  தலைமையேற்று மாணவர்கள் அனைவரும் முழு உடல்பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த முகாமின் மூலம் 146 மாணவர்கள் பயனடைந்தனர்.

இக்கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டத்தின் மூலம் இரத்த தானம் முகாம் தூத்துக்குடி இரத்த வங்கி மூலம் நடைபெற்றது. இந்த முகாமில் 30 மாணவர்கள் விருப்பத்துடன் கலந்து கொண்டு 24 யூனிட் இரத்தம் கொடுக்கப்பட்டது. மருத்துவர் சாந்தி, இரத்த வங்கி அலுவலர், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அவரின் குழு இதற்கான பணிகளை மேற்கொண்டனர். இந்த முகாமினை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பெலிக்ஸ் துவக்கி வைத்தார். 

மேலும் அனைத்து மாணவர்களும் இரத்த தானம் செய்து இரத்த தேவைப்படுவோர்க்கு உதவி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆராய்ச்சி இயக்குநர் ஜெரில் அந்தோணி, மற்றும் நீடித்த மீன்வளர்ப்பு இயக்குநர் பத்மாவதி, ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். முகாம் ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்  மு.முருகானந்தம், செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory