» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக ரூ.36 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது..!!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 7:53:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.36கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.36கோடியே 13 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஆறுமுகநேரி பாரதிநகரைச் சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமாரேசன்(46) என்பவரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி பாலகுமாரேசனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்  ஆய்வாளர் அந்தோணியம்மாள் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறையில் அடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory