» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம் : 600 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!

திங்கள் 15, ஏப்ரல் 2024 10:38:15 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழக மீன்வளத்துறை சாா்பில் ஆண்டுதோறும் மீன்களின் இனவிருத்திக்காக தமிழக கடலோரப் பகுதிகளில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 வரை 60 நாள்கள் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, தருவைக்குளம், வேம்பாா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த சுமாா் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மீனவா்கள் கூறியது: மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை பழுது பாா்க்க உள்ளோம். இந்த 60 நாள்களில் தொழில் இல்லாததால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, தோ்தலை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு மீனவா்களுக்கான தடைக்கால நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். மேலும், தமிழக கடற்கரை பகுதிகளில் கேரளம் மற்றும் பிற மாநில மீனவா்கள் வந்து மீன்பிடிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory