» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித வெள்ளியை முன்னிட்டு மவுண்ட் தேவாலயத்தில் ரத்ததான முகாம்

வெள்ளி 29, மார்ச் 2024 4:42:25 PM (IST)



தூத்துக்குடியில் புனித வெள்ளியை முன்னிட்டு மவுண்ட் தேவாலயத்தில் இயேசுபிரான் உலக மக்களுக்காக ரத்தம் சிந்தியதை நினைவு கூறும் வகையில் 50க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை  பெரும் நோயாளிகளுக்கு ரத்ததானம் வழங்கினர்.

இயேசு பிரான் உலக மக்களுக்காக ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்ட தினம் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் புனித வெள்ளியாக இன்று  கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள மவுண்ட் தேவாலயத்தில் இயேசுபிரான் ரத்தம் சிந்தியதை நினைவு கூறும் வகையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு வழங்கும் வகையில் ரத்தத்தை தானம் செய்தனர். இந்த ரத்ததான முகாமை தேவாலய பாதிரியார் கார்த்திக் கமாலியோ துவக்கி வைத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory