» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி சொத்து மதிப்பு, வழக்குகள் விபரம்!!

புதன் 27, மார்ச் 2024 11:37:57 AM (IST)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும்  கனிமொழி எம்பி தன்னிடம் ரூ.28 கோடியே 77 லட்சத்து 79 ஆயிரத்து 177 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும்  கனிமொழி எம்பி  போட்டியிடுகிறார். அவரது வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் கனிமொழி எம்பியின் கல்வி தகுதி, சொத்து விபரம், கடன், உள்பட பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்விபரம் வருமாறு: திமுக எம்பி கனிமொழி வணிகப் பொருளியல் படிப்பை சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்துள்ளதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்பி மீது 2 குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2ஜி அலைவரிசைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய பெற்றதாக கூறப்படும் பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு மற்றும் 2ஜி அலைவரிசைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி குற்றம்சாட்டப்பட்ட வழக்கு என்று 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சொத்து மதிப்பு: மேலும் கையில் ரூ.13,500 உள்ளது. பிஎம்டபிள்யூ கார், ஹுண்டாய் அல்கசார் கார், டொயோட்டா என 3 கார்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 ஆகும். மேலும் 704.28 கிராம் தங்கம், 12.03 காரட் வைர நகைகள் உள்ளன. மேலும் வங்கிகளில் வைப்புத்தொகை, பிற நிறுவனங்களின் முதலீடுகளை குறிப்பிட்டுள்ள கனிமொழி தன்னிடம் ரூ.28 கோடியே 77 லட்சத்து 79 ஆயிரத்து 177 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் வீடு, வணிக கட்டங்கள் உள்ளதாகவும், சொந்த நிலம் என தன்னிடம் ரூ.18 கோடியே 54 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். மொத்தமாக பார்த்தால் ரூ.47 கோடியே 32 லட்சத்து 21 ஆயிரத்து 770 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். இதுதவிர கனிமொழி எம்பிக்கு ரூ.60.60 லட்சம் கடன் உள்ளது. தற்போதைய சூழலில் கனிமொழி எம்பிக்கு வாடகை, வங்கியிலிருந்து பெறப்படும் வட்டி, எம்பி ஊதியம் ஆகியவற்றின் மூலம் வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து மதிப்பு  80 சதவீதம்  உயர்வு 

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார். ஆனால் இந்த முறை மொத்த சொத்து மதிப்பாக ரூ.57.32 கோடி காட்டியுள்ளார்.

இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.27 கோடி வரை உயர்ந்துள்ளது. இதில் அசையும் சொத்து மதிப்பு ரூ.17 கோடி அளவும், அசையா சொத்து மதிப்பு சுமார் ரூ.10 கோடி அளவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் அவரது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து

NameMar 29, 2024 - 03:27:33 PM | Posted IP 162.1*****

CBI,dvac itha note panunga pa

அதுMar 28, 2024 - 09:25:09 PM | Posted IP 172.7*****

எல்லாம் திருட்டு பணம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory