» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக, பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் : தூத்துக்குடியில் கனிமொழி பிரச்சாரம்!

திங்கள் 25, மார்ச் 2024 7:57:42 AM (IST)



தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி, தனது பிரசாரப் பயணத்தை கலைஞா் அரங்கிலிருந்து தொடங்கினாா்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் கனிமொழி, தனது பிரசாரப் பயணத்தை எட்டயபுரம் சாலையில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகமாக கலைஞா் அரங்கிலிருந்து தொடங்கினாா்.  முன்னதாக, அவா் அரங்கில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டாா். 

அப்போது அவா் பேசியது: மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது தூத்துக்குடியை எட்டிப் பாா்க்காத பிரதமா் மோடி, தற்போது தோ்தல் காரணமாக அடிக்கடி தமிழகம் வந்து செல்கிறாா். அவா் எத்தனை முறை வந்தாலும் மக்கள் தக்க பாடம் புகட்டுவா்.  தூத்துக்குடி தொகுதியை எனது இரண்டாவது தாய்வீடாக கருதுகிறேன். திமுகவை வீழ்த்த நினைப்போருக்கு இத்தோ்தலில் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்றாா். 

தேரடி, பள்ளிவாசல், PPMT ஜங்ஷன், சுமங்கலி கல்யாண மண்டபம், பக்கிள்புரம், சிதம்பர நகர், உருண்டையம்மன் கோவில், திரேஸ்புரம் சந்திப்பு, மட்டக்கடை ஆகிய பகுதிகளில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து, நம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய அவர் எப்போதும் தமிழ்நாட்டிற்கு எதிரான பாஜகவும், அதற்குத் துணை போன அதிமுகவும் தமிழ்மக்களுக்குச் செய்த துரோகங்களுக்குப் பாடம் புகட்டும் விதத்தில் இத்தேர்தல் அமைய வேண்டுமென பேசினார். 

தொடர்ந்து அவர், மாரியம்மன் கோயில், டிஎம்சி காலனி சந்திப்பு, 2ஆம் கேட், மட்டக்கடை உள்பட பல்வேறு பகுதிகளிலும் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். இதில், சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory