» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் ஆலயங்களில் குருத்தோலை பவனி!

ஞாயிறு 24, மார்ச் 2024 11:35:49 AM (IST)



நாசரேத் அருகிலுள்ளவெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் குருத்தோலை பவனி நடந்தது. 

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் மூக்குப்பீறி சேகரம் நாசரேத் அருகிலுள்ளவெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் குருத்தோலை பவனி மற்றும் குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஆராதனை நடந்தது. முன்னதாக சபை ஊழியர் ஜாண் வில்சன் தலைமையில் பாடகர் குழுவினர், சபையார் ஊரைச்சுற்றி குருத்தோலைகளை பிடித்துக் கொண்டு ஓசன்னா, ஓசன்னா என பாடிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். பின்னர் குருத்தோலை ஞாயிறு ஆராதனை நடைபெற்றது. இதில் திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குருத்தோலை ஞாயிறையொட்டி  நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் குருத்தோலை பவனி நடந்தது. தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து பவனியை துவக்கி வைத்தார்.  உதவிகுரு.பொன்செல்வின் அசோக்குமார்., சபை ஊழியர்கள் ஜெபராஜ் சாமுவேல்,   ஜெசு மற்றும் பாடகர் பாடகர் குழுவினர், சபையார்  குருத்தோலைகளை பிடித்துக் கொண்டு ஓசன்னா, ஓசன்னா என பாடிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து   ஆலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது. நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் குருத்தோலை பவனி பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் நடந்தது.  இதையடுத்து ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நடந்தது.

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில்  நடந்த பவனிக்கு சேகர தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார். சபை ஊழியர் ஸ்டான்லி, ஆலய பாடகர் குழு பொறுப்பாளர் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாடகர் குழுவினர் மற்றும் சபையார்   குருத்தோலைகளை பிடித்துக் கொண்டு  ஊரைச் சுற்றி ஓசன்னா, ஓசன்னா என பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.  இதனை தொடர்ந்து ஆலயத்தில் குருத்தோலை   ஞாயிறு ஆராதனை நடந்தது.   
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் குருத்தோலை பவனி சேகர தலைவர் ஞானசிங் எட்வின் தலைமையில்  தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவர் சாமுவேல்  முன்னிலையில் நடந்தது. இதில் சபை ஊழியர்  ஜெனோ ,பாடகர் குழு பொறுப்பாளர் ஜெயபால்  மற்றும் பாடகர் குழுவினர், சபையார் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஆராதனை நடந்தது. 

மேலும்  வகுத்தான்குப்பம், மணி நகர், வாழையடி, வெள்ளமடம், கடையனோடை, தங்கையாபுரம், ஒய்யான்குடி, பாட்டக்கரை, கச்சனாவிளை, நெய்விளை,  நாலுமாவடி , வெள்ளமடம், முதலை மொழி  மற்றும் அதன் சுற்று ப்பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory