» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிசி, எம்பிசி மக்களுக்கு ரூ.15லட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 11:52:39 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களுக்கு ரூ.15லட்சம் வரை கடனுதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆடவருக்கான சிறுவணிக கடன், கறவை மாட்டுக் கடன் மற்றும் புதிய கடன் திட்டங்களின் கீழ் இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு சுயதொழில் துவங்க கடன் திட்டம், மரபுசார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுயதொழில் தொடங்க கடன் திட்டம், சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறுகடன் திட்டம் சிறுகுறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம் ஆகியவை 15 இலட்சம் வரை குறைந்த வட்டி விகிதத்தில் 4% முதல் 8% வரை கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.
தகுதிகள்: கடன்தொகை பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராகவும், 18 வயது முதல் 60 வயது உடையவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: சாதிச்சான்றிதழ் நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், முன்னணியில் உள்ள நிறுவனமொன்றிலிருந்து விலைப்புள்ளி மற்றும் திட்டதொழில் அறிக்கை (ரூபாய் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டிருப்பின்)
பிணையம் : கடன் தொகை ரூ.50,000/- வரை கோரும் பட்சத்தில் ஒரு நபர் ஜாமீனும் ரூ.50,000/- க்கு மேல் இரு நபர் ஜாமீனும் வழங்குதல் வேண்டும். கடன்தொகை ரூ.1,00,000/- வரை கோரும் பட்சத்தில், மனுதாரர் சுய உத்தரவாதம் மற்றும் பின் தேதியிட்ட வங்கி காசோலை சமர்ப்பிக்கப்பட வேண்டும். கடன் தொகை ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.5,00,000/- வரை கோரும் பட்சத்தில், அரசு ஊழியர்/பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகள் (அ) வருமான வரி செலுத்தும் ஒருவரின் பின் தேதியிட்ட வங்கி காசோலை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ரூ.5,00,000/-ற்கு மேல் கடன்தொகை கோரும் பட்சத்தில் அரசு ஊழியர்/பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகள் (அ) வருமான வரி செலுத்தும் இருவரின் நிலம் சம்மந்தப்பட்ட அடமான ஆவணங்கள் / கடன் கோரும் தொகைக்கு சமமான அசையா சொத்துகளின் அடமானஆவணங்கள் மற்றும் பின் தேதியிட்ட வங்கி காசோலை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப்படிவத்தை கட்டணமின்றி பெற்று இத்திட்டத்தில் பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)
