» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

வெள்ளி 26, ஏப்ரல் 2024 10:02:51 AM (IST)



தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன அப்பணியில் முழுமையாக அமைச்சர் அரசு துறை அதிகாாிகள் ஈடுபட்டு, புதிய கால்வாய் சேதமடைந்த சாலைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பல்வேறு பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கோாிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக 6வது வார்டுக்குட்பட்ட அய்யர்விளையில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும், 7வது வார்டு லூர்தம்மாள்புரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கால்வாய் கட்டுமான பணிகளையும், 8 வது வார்டு திரேஸ்புரம் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு ஓப்பந்ததாரர்களிடம் நல்லமுறையில் பணியை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

பின்னா் அப்பகுதி மக்களிடம் குறைகளையும் அமைச்சர் கீதாஜீவன் கேட்டறிந்தாா். ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் பவாணி மார்ஷல், ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ராபர்ட், வட்டச் செயலாளர் ரவிசந்திரன், வட்டப் பிரதிநிதிகள் மார்ஷல், பாஸ்கர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழ தலைவர் செந்தில்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிாின்ஸ் ராஜேந்திரன், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory