» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூன் 12க்கு ஒத்திவைப்பு!

வெள்ளி 26, ஏப்ரல் 2024 12:45:25 PM (IST)

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கடந்த 2001-2006 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அனிதா ராதா கிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2006-ல் திமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா  மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின்  பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு உதவுவதற்காக தங்களையும் சேர்க்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) சுவாமிநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் என இரு தரப்பினரும்  விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி இருந்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜூன் 12-ம் தேதிக்கு தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory