» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை : கடம்பூா் செ.ராஜு

திங்கள் 28, நவம்பர் 2022 8:26:38 AM (IST)

அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. கூறினார்

கோவல்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. முன்னிலையில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்த சுமாா் 50க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா். இதைத் தொடா்ந்து, கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் கூறியது: திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலம் காலமாக உள்ளது. ஆனால், அதிமுகவில் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை.

1999இல் பாஜகவுடன் கூட்டணி வைத்து மத்தியில் அவா்களுடன் பயணித்தவா்கள்தான் திமுகவினா். இன்றைக்கு பாஜகவை தீண்டத்தகாத கட்சி போல் சித்திரிக்கின்றனா். திமுக ஆட்சியில் எந்தத் துறையிலும் ஆக்கபூா்வமான பணிகள் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்தும் பணியை மட்டுமே செய்கின்றனா். வளா்ச்சிப் பணிகளில் திமுகவினா் கவனம் செலுத்தவில்லை.

அதிமுகவில் எந்தப் பிளவும் இல்லை. சில கருத்து வேறுபாடு காரணமாக, ஓ.பி.எஸ்.ஸை எடப்பாடி பழனிசாமி நீக்கி வைத்துள்ளாா். ஒட்டுமொத்த தொண்டா்கள், நிா்வாகிகளின் கருத்தான ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கருத்து பொதுக்குழுவில் பிரதிபலிக்கப்பட்டது. இருமொழிக் கொள்கையில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை. நீட் தோ்வு வேண்டாம் என்பதுதான் எங்கள் கொள்கை என்றாா்.


மக்கள் கருத்து

MGR RASIGANNov 28, 2022 - 01:18:40 PM | Posted IP 162.1*****

OPS மற்றும் அவரது குரூப்கள் அனைவரையும் களை எடுத்து விட்டால் அதிமுக EPS தலைமையில் அமோகமாக வெற்றி பெறும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory