» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொதுத் தேர்வில் சாதனை: ஆட்சியர், எஸ்பி பாராட்டு!
திங்கள் 20, ஜூன் 2022 5:42:39 PM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி பாலாஜி சரணன் ஆகியோர் பாராட்டினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 833 மாணவர்கள், 11 ஆயிரத்து 461 மாணவிகள் ஆக மொத்தம் 22 ஆயிரத்து 294 பேர் எழுதினர். இதில் 9 ஆயிரத்து 615 மாணவர்கள், 11 ஆயிரத்து 91 மாணவிகள் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 706 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 92.88 சதவீதம் ஆகும். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சியில் 9-வது இடத்தை பிடித்து உள்ளது.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 803 பேர் தேர்வு எழுதியதில் 6 ஆயிரத்து 256 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 91.96 சதவீதம் தேர்ச்சி ஆகும். தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 241 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 9 ஆயிரத்து 692 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.64 சதவீதம் ஆகும். திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 250 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 4 ஆயிரத்து 758 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 90.63 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்த திருச்செந்தூர் காஞ்சி சங்கரா மெட்ரிக் பள்ளி மாணவி துர்க்கா, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில முதல் இடம் பிடித்த தூத்துக்குடி பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கர்பகா ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி பாலாஜி சரணன் ஆகியோர் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய இளைஞர் கைது
புதன் 29, ஜூன் 2022 5:27:11 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி இளம்பெண் பலி : சகோதரன் காயம்
புதன் 29, ஜூன் 2022 7:59:27 AM (IST)

கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்: இந்து முன்னணி சார்பில் பிரசார பயணம் தொடக்கம்
புதன் 29, ஜூன் 2022 7:47:00 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.3.60 கோடி உண்டியல் வருவாய்
புதன் 29, ஜூன் 2022 7:40:50 AM (IST)

நெய்தல் விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை
செவ்வாய் 28, ஜூன் 2022 9:14:21 PM (IST)

தூத்துக்குடியில் நடைபாதையை சேதப்படுத்தி பேனர்: ஒப்பந்தக்காரர் கடைக்கு சீல்வைப்பு
செவ்வாய் 28, ஜூன் 2022 8:59:01 PM (IST)
