» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து கடவுளை இழிவுபடுத்தியவரை கைது செய்யக் கோரி நிர்வாண போராட்டம்: ‍ இ.தே.க. தலைவர் கைது!

திங்கள் 16, மே 2022 12:28:05 PM (IST)தூத்துக்குடியில், இந்து கடவுளை இழிவுபடுத்திய யூடியூப்பரை கைது செய்ய வலியுறுத்தி நிர்வாண பாேராட்டம் நடத்த முயன்ற இந்து தேசிய கட்சித் தலைவரை போலீசார் கைது செய்தனர்.

சமூக வலைதளமான யூட்யூபில் U2 Brutus என்ற சேனலை நடத்தி வருபவர் மைனர் விஜய். இவர் இந்து மதம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்துக்களின் முதன்மையான தெய்வமான நடராஜ சிவபெருமான் குறித்து அவதூறாக சித்திரித்துள்ளதாகவும், இது இந்துக்களின் மனதை புண்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளதாக இந்து அமைப்பினர் பல்வேறு மாவட்டங்களில் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்து மதத்தையும் சிதம்பரம் நடராஜர் இந்து கடவுளையும் இழிவுபடுத்தி யூட்யூபில் பதிவு செய்து வெளியிட்ட மைனர் விஜய்யை கைது செய்யக்கோரி இந்து தேசிய கட்சி தலைவர் மாவட்ட ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நிர்வாண போராட்டம் நடத்த முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சிப்காட் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  ரவிச்சந்திரன் உள்பட இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory