» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.87ஆயிரம் அபராதம்

வியாழன் 20, ஜனவரி 2022 4:24:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 435 பேருக்கு ரூ.87ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒமைக்ரான் கொரோனா வைரஸ்  பரவி வருவதால் பொது இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா  ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு தலா 500/- அபராதமும் விதிக்கப்படுகிறது.

அதன்படி  தூத்துக்குடி மாவட்டத்தில்  நேற்று (19.01.2022) பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 67 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 49 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 27 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 37 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 46 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 146 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 26 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 37 பேர் மீதும் என மொத்தம் 435 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.87ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நம்மையும் காப்பாற்றி, நம்மால் பிறருக்கு தொற்று பரவாமல் பிறரையும் காப்பாற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory