» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதை பொருட்கள் கடத்தலை முற்றிலும் ஓழிக்க நடவடிக்கை: எஸ்.பி., ஆலோசனை!

வியாழன் 25, ஏப்ரல் 2024 8:01:58 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆலோசனை நடத்தினார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இரவு, பகல் பாராமல் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, யார், யார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்பதை கண்டுபிடித்து, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்தும், அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்கம் செய்தும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன் தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்க தனியாக அறிவிக்கப்பட்டுள்ள 8300014567 மற்றும் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொண்டு காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாகவும், குற்றமில்லாத மாவட்டமாகவும் உருவாக்குவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா, காவல் துணை கண்காணிப்பாளர்கள் திருச்செந்தூர்  வசந்தராஜ், மணியாச்சி  லோகேஸ்வரன், கோவில்பட்டி  வெங்கடேஷ், ஸ்ரீவைகுண்டம்  மாயவன், விளாத்திகுளம்  ராமகிருஷ்ணன் உட்பட சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory