» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

புதன் 27, ஜனவரி 2021 4:12:51 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

ஏரல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் முதல்நிலைக் காவலர் தாமஸ் பால்ராஜ், ஓட்டப்பிடாரம் பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை 48 மணி நேரத்தில் கைது செய்த ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வளார் சங்கர், மணியாச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  பொன் முனியசாமி, ஓட்டப்பிடாரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் ராஜா, காவலர்கள் பாலமுருகன், கணேசன் மற்றும் கடம்பூர் காவல் நிலைய காவலர் விடுதலை பாரதி கண்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

விளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணலை கடத்திய வாகனத்தை கைப்பற்றிய காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், தலைமைக் காவலர் அல்போன்ஸ் மரிய ராஜா மற்றும் காவலர் கதிர்வேல், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.90ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றிய காவலர் அருண் விக்ணேஷ் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய காவலர் ரமேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

2020 ஆம் ஆண்டில் 125 எதிரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உதவியாக இருந்த சேரகுளம் காவல் நிலைய தலைமைக் காவலர் சுப்பிரமணியன் மற்றும் ஆயுதப்படை காவலர் சுந்தரவேல் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும் 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழச்சியின்போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest CakesThalir Products


Thoothukudi Business Directory