» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கரோனா வைரஸ் பரவல் : எஸ்பி ஆய்வு

வெள்ளி 10, ஜூலை 2020 12:30:43 PM (IST)தூத்துக்குடியில் கரோனா  வைரஸ் வேகமாக பரவி வரும் திரேஸ்புரம் பகுதிகளில் எஸ்பி எஸ்.ஜெயக்குமார் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதியில் 51 பேர் கரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 31 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இப்பகுதியில் அதிக பேர் கரோனா  தொற்றால் பாதிக்ப்பட்டுள்ளதால் திரேஸ்புரம், தொம்மையார் கோவில் தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தூத்துக்குடி பிரையண்ட் நகரிலும் கரோனா  வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் பிரையண்ட் நகர் 9வது தெரு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதிகளை இன்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கரோனா  வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி கணேஷ், வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள், தென்பாகம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

THOOTHUKUDIJul 10, 2020 - 04:32:26 PM | Posted IP 162.1*****

kOVILPATTI LA VANIKARSANGAM MUDIVU PANNI LOCKDOWN POTAMATHIRI THOOTHUKUDI CITY KUM POTALAMLA ,, ROMPA SPREAD AGITEY POGUTHU ,, PLEASE COLLECTOR SIR ETHATHU STEP ETUNGA ,, SUNDAY ONE DAY MATTUM FULL LOCK DOWN POTTA PATHATHU SIR, PLEASE DO ANY STEP,,

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest Cakes

Anbu Communications


Thoothukudi Business Directory