» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி குழந்தைகளுக்கு கரோனா நிவாரண பொருள்கள் வழங்கல்

திங்கள் 6, ஜூலை 2020 6:42:33 PM (IST)


கோவில்பட்டியில் சிடார் அமைப்பு சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கரோனா நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில்பட்டி தாமஸ்நகரில் உள்ள தமிழ் பாப்திஸ்து பள்ளியில் லண்டனில் இருக்கும் பேப்பர் போட் என்கிற குழந்தைகள் நிறுவனத்தின் நிதி உதவியுடன் சிடார் அமைப்பு சார்பில் பள்ளி குழந்தைகளுக்க சுமார் 1500 ரூபாய் மதிப்புள்ள கரோனா நிவாரண பொருள்கள் அடங்கிய பெட்டி வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிடார் திட்ட ஒருங்கிணைப்பாளர் மாரியம்மாள் தலைமை வகித்தார். தமிழ்பாப்திஸ்து பள்ளியின் தாளாளர் லால்பகதூர் கென்னடி முன்னிலை வகித்தார்.

சிடார் மூத்த களப்பணியாளர் மைக்கில்ராஜ் வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் கலந்து கொண்டு  குழந்தைகளுக்கு கரோனா நிவாரண பொருள்கள் பெட்டியை வழங்கினார்.  இதில் சிடார் களப்பணியாளர் மாரிக்கண்ணன், ஊக்குவிப்பாளர்கள் கௌசல்யா, கல்பனா, தெற்குகோனார்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழ் பாப்திஸ்து பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications
Black Forest Cakes
Thoothukudi Business Directory