» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமான இளம்பெண் வடமாநில வாலிபருடன் மாயம்

ஞாயிறு 8, டிசம்பர் 2019 12:09:35 PM (IST)

தூத்துக்குடியில் திருமணமான இளம்பெண் வடமாநில வாலிபருடன் மாயமானதாக கூறப்படும் சம்பவம் குறித்து  புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடியை சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மனைவி ராதா(25) இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பதகராறில் ராதா கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தெய்வசெயல்புரத்தில் வசித்து வந்தார். அங்குள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். 

அந்த கம்பெனியில் பணிபுரிந்த அசாமை சேர்ந்த அஜய் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டதாம். இந்நிலையில் தனது 2 குழந்தைகளுடன் அழைத்து கொண்ட அஜயுடன் அசாம் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

அருண்Dec 9, 2019 - 09:35:10 AM | Posted IP 162.1*****

என்ன எழவு டா இது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory