» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா : உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 11:56:25 AM (IST)தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை  முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு முக்கிய அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ

தூத்துக்குடியில் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

உடன் முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், அதிமுக அமைப்புச்சாரா ஓட்டுநரணி இணைச்செயலாளர் பெருமாள் சாமி,  மாநகர பகுதி அதிமுக செயலாளர்கள் பொன்ராஜ், ராமகிருஷ்ணன், முன்னாள் பெருநகர செயலாளர் ஏசாதுரை, ஒன்றிய கழக செயலாளர்கள் திருச்செந்தூர் இராமச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகநயினார், ஆழ்வார்திருநகரி செம்பூர் ராஜ் நாராயணன், சாத்தான்குளம் சௌந்தரப்பாண்டி, உடன்குடி மகாராஜன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், சிவத்தையாபுரம் குணசேகரன், பேரூராட்சி செயலாளர்கள் காசிராஜன், அரசகுரு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் வீரபாகு, மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் கோமதி மணிகண்டன், வக்கீல் கருப்பசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் சத்யா இலட்சுமணன், மாவட்ட மகளிரணி சி.த.செரினா பாக்கியராஜ், மருத்துவஅணி செயலாளர் டாக்டர் ராஜசேகரன்,மேற்கு மண்டல தலைவர் சந்தனம் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.சி.த செல்லப்பாண்டியன்

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு இன்று காலை அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்  சி த செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது..

இந்த நிகழ்ச்சியில் மேற்குப் பகுதி  செயலாளர் முருகன்,முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால்,மாவட்ட மகளீர் அணி செயலாளர்  குருத்தாய், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜீவா பாண்டியன் ,மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ் ,மேற்கு பகுதி துணைச் செயலாளர் கணேசன்,மாவட்ட இளைஞரணி மூர்த்தி, வேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சங்கரேஸ்வரி,துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், கேடிசி சங்கர் , அந்தோணி முருகானந்தம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று  தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினர் என்பி.ஜெகன் தலைமையில் மாலை  அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, பாலசுப்பிரமணியன், சுரேஷ்குமார், பாலகுருசாமி, கீதாமுருகேசன், சுரேஷ், செய்யதுகாசிம், கலைசெல்வி, வட்ட செயலாளர் கதிரேசன், பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அமமுக

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக சார்பில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள  அண்ணா திருவுருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் புவனேஷ்வரன் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு பகுதி செயலாளர் எட்வின் பாண்டியன் முன்னாள் மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேசி, சுகந்திகோமஸ், ராஜேஸ்வரி, கோட்டாளமுத்து, மாநகராட்சி சுடலைமுத்து,ஸ்டீபன்.வழக்கறிஞர் செல்வகுமார், ரமேஷ்கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஓய்வூதியர்கள் சங்கம் 

பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள  அண்ணா திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு மாநகராட்சி,நகராட்சி, ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மாியாதை செலுத்தப்பட்டது. இதில் அச்சங்கத்தின் தலைவர் மாடசாமி, மாலை அணிவித்தார். சங்க செயலாளர் சுந்தரவேல், ரஸ்கின், அந்தோணி,பழனி உட்பட அந்த சங்கத்தினை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

maniSep 15, 2019 - 04:52:50 PM | Posted IP 162.1*****

MP ,MLA எங்கடா...?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory