» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மர்ம காய்ச்சலால் சிறுமி சாவு : தூத்துக்குடியில் சோகம்

புதன் 11, செப்டம்பர் 2019 4:23:59 PM (IST)

தூத்துக்குடியில் மர்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகள் இசக்கியம்மாள் (13). இவர் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5 நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்ததால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், இன்று மதியம் இசக்கியம்மாள் சிசிக்கை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  மர்ம காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes


Anbu Communications





Thoothukudi Business Directory