» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வரும் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு

புதன் 17, ஜூலை 2019 6:43:58 PM (IST)

உபமின்நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடியில் வரும் 20ம் தேதி (சனிகிழமை) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 20 ம் தேதி (சனிகிழமை) அன்று காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு, 1ம்கேட், 2ம்கேட், மட்டக்கடை, பீச்ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்,தெப்பகுளம், சிவன்கோவில் தெரு, டபிள்யூஜிசி ராேடு, ஜார்ஜ் ரோடு, விஇ ரோடு, ஸ்டேட்பாங்க் காலனி, முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், சிவந்தாகுளம் மெயின்ரோடு, தாமோதரன் நகர், குறிஞ்சிநகர், சிதம்பரநகர், பிரையண்ட்நகர், சுப்பையாமுதலியார்புரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டப்பிடாரத்தில் மின்தடை: 

இதேபோல்,  ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் ஜூலை 20ம்ஆம் தேதி நடைபெறுவதால், அன்றையதினம் ஓட்டப்பிடாரம்,  ஒசநூத்து,  ஆரைக்குளம்,  பாஞ்சாலங்குறிச்சி,  வெள்ளாரம்,  க.சுப்பிரமணியபுரம்,  குறுக்குச்சாலை,  புதியம்புத்தூர்,  சில்லாநத்தம்,  வீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam Pasumaiyagam

Anbu Communications
Thoothukudi Business Directory