» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கனிமொழி: கருணாநிதி நினைவிடத்தில் மலரஞ்சலி

வெள்ளி 24, மே 2019 3:22:58 PM (IST)தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கனிமொழி சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைவிட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுக்கு பின்னர் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி கனிமொழியிடம் வழங்கினார். இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்த கனிமொழி மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.

கருணாநிதி சமாதியில் தனது வெற்றி சான்றிதழை வைத்து வணங்கினார். கனிமொழியின் கணவர் மற்றும் தாயார் உடன் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தனக்கு வாக்களித்த தூத்துக்குடி மக்களுக்கும் இந்த வெற்றிக்காக உழைத்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். பின்னர்  அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

சாமிமே 25, 2019 - 11:17:52 AM | Posted IP 162.1*****

இன்னும் பலகோடி சுருட்ட வாழ்த்துக்கள்

தூத்துகுடியன்மே 24, 2019 - 06:51:32 PM | Posted IP 173.2*****

தங்களின் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


CSC Computer EducationBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory