» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எஸ்பி., அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

செவ்வாய் 21, மே 2019 1:34:20 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி இன்று காலை மாவட்ட எஸ்பி., முரளி ரம்பா,  தலைமையில் எடுக்கப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 21ம் தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் என அனுஷ்டிக்கப்பட்டு உறுதி மொழி எடுக்கப்படுகிறது.  ஆகவே இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி., முரளி ரம்பா, தலைமையில், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள்  வேதரத்தினம், பொன்ராமு ஆகியோர் முன்னிலையில் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கீழ்கண்டவாறு உறுதி மொழி எடுத்தனர். 

அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ் செயல்களையும், வன்முறைகளையும், முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறுவிளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடவும் நாம் உறுதி கூறுகிறோம்.என உறுதிமொழி எடுக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Anbu Communications




Thoothukudi Business Directory