» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக வேட்பாளர் 29-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் : அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

வியாழன் 25, ஏப்ரல் 2019 4:22:00 PM (IST)ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் வருகிற 29ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.மோகன், இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் வேட்பாளருக்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளருடன் வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க மற்றும் பா.ம.க., கட்சிகளின் முற்போக்கு கூட்டணிக்கட்சிகள்  வெற்றி பெறும். 

ஓட்டப்பிடாரத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் 7 முறை அ.தி.மு.க, வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலிலும்  ஓட்டப்பிடாரம், அதிமுகவின் எஃகு கோட்டை என்பதை வெற்றி பெற்று நிரூபிப்போம்.  வருகிற 29-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளோம். அதைத்தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் ஓட்டப்பிடாரத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். வருகிற ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, காமராஜ், மணிகண்டன், மாவட்ட அமைச்சராகிய நான் உள்பட 8 அமைச்சர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர்.  

ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் முடிந்தவுடன் வெற்றி  பரிசாக மக்களின் நீண்டகால கோரிக்கையான புதிய தாலுகா நீதிமன்றம் அமைக்கப்படும்.  விவசாய பாசனத்திற்கான நீர் தேவைக்கு கொம்பாடி அணையில் தடுப்பணை கட்டுவதற்கு கருத்துரு தயாரிக்கப்பட்டு திட்டம் பரிசீலனையில் உள்ளது. வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.  நாங்கள் நிர்ணயித்துள்ளது 50 ஆயிரம் வாக்குகள் ஆனால்,  மக்களின் எழுச்சிமிகு வரவேற்பை பார்க்கும் போது 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி"  என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அ.தி.மு.க.,  வேட்பாளர் மோகன் கூறுகையில் "ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்பது அனைவருக்குமே தெரியும். இந்த முறை நான் வெற்றி பெற்றால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் முழுமையாக செயல்படுத்த பாடுபடுவேன்." என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications


Thoothukudi Business Directory