» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை : தூத்துக்குடியில் பரபரப்பு

செவ்வாய் 16, ஏப்ரல் 2019 10:47:34 PM (IST)தூத்துக்குடியில் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார்.  இதற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் குறிஞ்சிநகரில் உள்ள கீதாஜீவன் எம்எல்ஏவின் வீட்டில் தங்கி உள்ளார். அவரது வீட்டுக்கு அருகே திமுகவின் தேர்தல் அலுவலகமும் உள்ளது. இந்நிலையில், அவர் தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் 10 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. வீட்டில் இருந்து வெளியேவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் இருப்பவர்களிடம் உள்ள ஃபோன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் கனிமொழி வீட்டுக்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. சிறிது நேரத்துக்கு பின், கீதாஜீவனை மட்டும் போலீசார் வீட்டுக்குள் அனுமதித்தனர். இதையடுத்து அங்கு திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராகவும், தேர்தல் கமிஷனுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், நேரம் செல்ல, செல்ல தி.மு.க. தொண்டர்கள் அந்த பகுதியில் குவிந்து வருவதால் தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டது. 

இதற்கிடையே, கனிமொழி வீட்டின் முன்பு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது: கனிமொழி வீட்டில் அனைத்து அறைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். ஆனால் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், கனிமொழிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவும் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனையை தொடர்ந்து இங்கு தேர்தலை ரத்து செய்வதற்காக எதிர்க்கட்சியினர் ஈடுபடுகின்றனர். ஆனாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

ஒருவன்Apr 18, 2019 - 12:43:01 PM | Posted IP 141.1*****

இரண்டு திருட்டு திராவிட கட்சிகள் (இடுப்புகிள்ளி திமுக வும் , டயர் நக்கி அதிமுகவும் ) வீட்டில சோதனை பண்ணுங்கடா ..நாட்டுக்கு தேவை இல்லாத 2 ஆணிகள்

சாமிApr 17, 2019 - 06:24:23 PM | Posted IP 172.6*****

நோட்டாவை தாண்டாத கட்சி - முன்னாள் - அது உண்மைதான் - ஆனால் இப்ப - அதிமுக - தேமுதிக - பாமக - என்நும் பெரும் கூட்டணி - அதன் முன்பு திமுக டெபாசிட் இழக்கும்

கூமுட்டைApr 17, 2019 - 04:10:46 PM | Posted IP 162.1*****

சிவன் -சிவலோகம் சாமீ -ஸ்டேர்லிட் குவார்ட்ஸ் , இப்போ வேல இல்லை

சென்னியப்பன்Apr 17, 2019 - 01:57:05 PM | Posted IP 162.1*****

என்னதான் செஞ்சாலும் தாமரை பக்கஇல் ஓடை ல தான் மலரும் வெங்காய தாமரை.. சாமி எடுத்து காதுல வச்சிக்குவர் ...

மக்கள்Apr 17, 2019 - 01:34:24 PM | Posted IP 141.1*****

சாமி சொன்னது மிகவும் சரி ! இடைத்தேர்தலில் டெப்பாசிட் வாங்காத கட்சிதான் , ஆனால் பிஜேபி நோட்டா வை விட ஓட்டு கம்மிக்கிறதை மறந்திட்டார் . சிவன் கடந்த 5 வருடம் கோமாவிலையா இருந்திக்க

நிஹாApr 17, 2019 - 11:56:24 AM | Posted IP 162.1*****

பி.ஜெ.பி.யில் உள்ளவர்கள் அனைவருமே நல்லவர்களா? அவர்களிடம் மட்டும் இதுவரை எந்த தோதனையும் நடத்தப்படவில்லையே?

சாமிApr 17, 2019 - 10:56:42 AM | Posted IP 172.6*****

பிஜேபி வெற்றி எப்பவோ உறுதி ஆயிடுச்சி - இடைத்தேர்தல்லயே டெபாசிட் வாங்காத கட்சியை கண்டு பயமா?

பாலாApr 17, 2019 - 09:55:32 AM | Posted IP 162.1*****

ஏன் சாமி பயம் வந்துருச்சா நீதான் பி ஜே பி ஜெயிக்கும்னு சொன்ன. பி ஜே பி தோல்வி பயம் தெரிகிறது....

சிவன்Apr 17, 2019 - 07:25:56 AM | Posted IP 172.6*****

காங்கிரஸ் ஆட்சியில் இந்த ஒட்டுண்ணி அடித்த கொள்ளை பணம் முழுவதையும் கைப்பற்றுங்கள்

சாமிApr 17, 2019 - 07:17:08 AM | Posted IP 172.6*****

புடிச்சு உள்ள போடுங்கப்பா - வேலூரை மாதிரி இங்கயும் தேர்தலை கேன்சல் பண்ணுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory