» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

11 வகையிலான ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

வெள்ளி 12, ஏப்ரல் 2019 12:00:50 PM (IST)

11 வகையிலான மாற்று புகைப்பட ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : இந்திய தேர்தல் ஆணையம் நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல், பாராளுமன்ற பொதுத் தேர்தலுடன் நடைபெறவுள்ள சட்டமன்ற பேரவைகளுக்கான இடைத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத அத்தகைய வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை அளிக்க வேண்டும்.

1. கடவுச்சீட்டு

2. ஓட்டுநர் உரிமம்

3. மத்திய/மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்;ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்;

4. வங்கி/அஞ்சலக கணக்குப்புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய )

5. நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card) 

6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.

7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை

8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10.  பாராளுமன்ற /சட்ட மன்ற சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.

11. ஆதார் அட்டை.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் மெய்ப்பிக்கப்படுகின்றபோது, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையிலுள்ள அச்சுப்பிழைகள் / எழுத்துப் பிழைகள் முதலியவற்றை பொருட்படுத்த தேவையில்லை. மற்றொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை, வாக்காளர் ஒருவர் அளிப்பாராயின், அந்த வாக்காளர் வாக்களிப்பதற்காக வந்துள்ள வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெற்றிருக்குமாயின், அத்தகைய வாக்காளர் புகைப்பட அட்டைகளையும் ஏற்றுக்கொள்ளலாம். 

புகைப்படம் பொருந்தாததால் வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிக்க இயலாத நேர்வில், வாக்காளர், மேலே குறிப்பிடப்பட்டுள்ள 11 வகையிலான மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் 18.4.2019 அன்று நடைபெறும் 36 - தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொது தேர்தல் மற்றும் 213 - விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்காளர் அடையாள அட்டை அல்லது மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory