» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் வெட்டிக் கொலை - கள்ளக்காதலன் தற்கொலை : எட்டையபுரம் அருகே பயங்கரம்

வியாழன் 18, அக்டோபர் 2018 10:06:07 PM (IST)

எட்டையபுரம் அருகே பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு கள்ளக்காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம்,  எட்டையபுரம் அருகே வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் சூசைமரியான் மனைவி பாத்திமா மேரி (45). இவரது பக்கத்துவீட்டில் வசிப்பவர் செபஸ்தியன் மகன் அந்தோணிராஜ் (48). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,  பாத்திமா மேரிக்கும் அந்தோணிராஜீக்கும் இடையே 2 வருடமாக கள்ளத்தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒருவாரமாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று இரவு 7 மணியளவில் கடைவீதிக்கு சென்றுவிட்டு திரும்பிய பாத்திமா மேரியை வழிமறித்து அந்தோணி ராஜ் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணி ராஜ் பாத்திமா மேரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக எட்டையபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

StalinOct 19, 2018 - 05:14:35 AM | Posted IP 162.1*****

அழிவு

அருண்Oct 18, 2018 - 10:19:42 PM | Posted IP 172.6*****

என்ன கொடுமை சர் இது...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors

CSC Computer Education

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory