» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடையை மீறி தங்கு கடல் சென்ற 28 விசைப்படகுகள் : தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 18, அக்டோபர் 2018 11:39:30 AM (IST)

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடையை மீறி 28 விசைப்படகுகளில் சுமார் 200 மீனவர்கள் தங்கு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தங்கு கடல் முறையில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இரவு 10 மணிக்குள் கரை திரும்பவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்கு கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தடையை மீறி 28 படகுகளில் சுமார் 220 மீனவர்கள் இன்று காலை தங்கு கடல் முறையில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். இதனால் சக மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTDJoseph Marketing
Thoothukudi Business Directory