» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமான 2 நாளில் கள்ளக்காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்

சனி 24, பிப்ரவரி 2018 5:21:17 PM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே திருமணமான 2வது நாளிலேயே புதுப்பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் விஜயலெட்சுமி (27), இவருக்கும் தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 19ம் தேதி திருமணம் நடந்தது. 21ம் தேதி மறுவீட்டிற்காக மணமக்கள் மேலமுடிமண் வந்தனர். அன்றிரவு வெளியில் சென்ற விஜயலெட்சுமி, நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எந்த தகவலும் தெரியவில்லை. 

இதைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில், புதுப்பெண் விஜயலெட்சுமி அதே ஊரைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான மதன் என்பவருடன் ஊரை வி்ட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். மதனுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். அவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். திருமணமான 2வது நாளிலேயே புதுப்பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape TailorscrescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph MarketingThoothukudi Business Directory