» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படும் : தமிழகம், கேரளத்துக்கு எச்சரிக்கை!

சனி 4, மே 2024 12:17:00 PM (IST)

தமிழகம், கேரளம் உள்பட அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்கடல் என்று அழைக்கப்படும் அதீத அலை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், மே 4 மற்றும் 5ம் தேதிகளில் இது நேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு வரை தென் மாவட்டங்களில் 0.5 - 1. 5 அடிக்கு அலைகள் எழலாம் என்றும், முதல் முறையாக இதுபோன்றதொரு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மும்பை கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 1.5 மீட்டர் அளவுக்கு எழலாம் என்றும் மக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்கள் படகுகளை கடற்கரையிலிருந்து தொலைவில் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடற்கரைகளில் உறங்குவோருக்கு எச்சரிக்கை விடுக்குமாறு காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரங்களில் வியாபாரம் செய்யும் வணிகர்கள் பாதுகாப்பாக கடற்கரையோரத்திலிருந்து சற்று தொலைவில் உடைமைகளை பாதுகாப்பாக வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை கடற்பகுதிக்கும் இந்த அதீத அலைக்கான அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, சென்னை, கடலூர் உள்ளிட்ட மாஅனவட்ட கடலோரப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும், தென் தமிழகம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் ஸ்வெல் சர்ஜ் எனப்படும் அதீத அலை எழும் அபாயம் இருப்பதாகவும், மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory