» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேஜரிவால் வீட்டில் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: வீடியோ வெளியிட்ட ஆம் ஆத்மி!

வெள்ளி 17, மே 2024 5:32:44 PM (IST)

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டில், ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி புதிய வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி தாக்கப்படுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட விடியோ என தெரிவிக்கப்படும் இதன் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. விடியோவில் ஸ்வாதி மாலிவால் முதல்வரின் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது கேட்கிறது. தன்னை டிசிபி மற்றும் சிவில் காவல் அதிகாரியிடம் பேசவிடுமாறு அவர்களிடம் ஸ்வாதி கேட்டுள்ளார்.

மேலும், அவர் ஏற்கெனவே காவலர்களுடன் பேசியதாக சொல்வதாகவும் பின்னர் பணியாளர்களில் ஒருவரை வேலை விட்டு நீக்குவதை தான் காண்பேன் என சொல்வதும் அந்த விடியோவில் கேட்கிறது.இதனை பகிர்ந்துள்ள ஆம் ஆத்மி, ஸ்வாதி மாலிவாலின் உண்மைமுகம் என பதிவிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி இந்த விவகாரத்தில் தனது கட்சியின் எம்.பிக்கு எதிராக முதல்வரின் பணியாளரை ஆதரிப்பதுபோல பதிவிட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த விடியோ பகிரப்பட்டது தொடர்பாக ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் பக்கத்தில், "எப்போதும் போல அரசியல் ரெளடி தன்னை காத்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார். அவரது ஆள்கள் மூலம் டிவிட் பதிவிடுவதும் எந்தவித பொருளுமற்ற விடியோவை பகிர்வதன் மூலமும் தான் செய்த குற்ற செயல்களில் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியும் என நினைக்கிறார். ஒருவர் தாக்கப்படும்போது யார் விடியோ எடுத்தது? 

வீடு மற்றும் அறையின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தாலே உண்மை தெரியவரும். எந்த எல்லை வரை செல்ல முடியுமோ செல்லுங்கள், கடவுள் எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருக்கிறார். உலகத்தின்முன் ஒரு நாள் உண்மை வெளியே வரும்” என பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை, முதல்வரின் வீட்டில் சோதனை செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory