» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் தேர்தல் வன்முறை : தலைமைச் செயலர், டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் சம்மன்!

புதன் 15, மே 2024 5:48:19 PM (IST)

ஆந்திராவில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி அம்மாநில தலைமைச் செயலர், டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

மக்களவை 4வது கட்ட தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் (மே 13) தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 81.86 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக இன்று (மே 15) தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிகபட்சமாக குப்பம் தொகுதியில் 89.88 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா கூறியுள்ளார்.

இதனிடையே, நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு ஆந்திராவில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதற்கு அம்மாநிலத்தை ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் மாறி மாறி குற்றம்சாட்டின. இதனால், அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தவறியது குறித்து நேரில் விளக்கம் அளிக்கும்படி ஆந்திர மாநில தலைமைச் செயலர், டிஜிபி.,க்கு தலைமை தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை, அவர்கள் டில்லி வந்து, கலவரம் ஏன் நடந்தது?, தடுக்க தவறியது ஏன்?, இனி வரும் நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மனில் உத்தரவிடப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory