இளையராஜா இசையில் தனுஷ் பாடியுள்ள விடுதலை படத்தின் முதல் பாடல்!

Sponsored Ads


இளையராஜா இசையில் தனுஷ் பாடியுள்ள விடுதலை படத்தின் முதல் பாடல்!
பதிவு செய்த நாள் புதன் 8, பிப்ரவரி 2023
நேரம் 5:39:47 PM (IST)

வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் பாடியுள்ள விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அசுரன் திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக வைத்து விடுதலை என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர். இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ஒன்னோட நடந்தா பாடல் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் சுகா எழுதியுள்ள இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Thoothukudi Business Directory