திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பதிவு செய்த நாள் | சனி 6, பிப்ரவரி 2010 |
---|---|
நேரம் | 12:38:06 PM (IST) |
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கொடியேற்றத்தையொட்டி இக்கோயிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 4 மணிக்கு பல்லக்கில் கொடிபட்ட வீதி உலா நடந்தது. இதனையடுத்து அம்பாள் சன்னதிக்கு எதிரெ உள்ள கொடிமரத்தில் அதிகாலை 5.45 மணிக்கு காப்பு கட்டிய பாலசுப்பிரமணியம் வல்லவராயர் தலைமையில் மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. இதனைதொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், தர்பபைபுல் மற்றும் பட்டு வஸ்திரங்கள் சாத்தாப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு சோடஷ தீபாராதனை நடந்ததின் வீடியோ தொகுப்பு. ஒளிப்பதிவு:கந்தன்.