மணியாச்சியில் இரயில் மறியல் !
மணியாச்சியில் இரயில் மறியல் !
பதிவு செய்த நாள் | திங்கள் 25, ஜனவரி 2010 |
---|---|
நேரம் | 11:03:37 AM (IST) |
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் சார்பில், தூத்துக்குடி ரயில் நிலையம் முன்பு தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட பயணிகள் நலச்சங்க தலைவர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். செயலாளர் பிரமநாயகம் நோக்கம் குறித்து பேசினார்.