» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தேர்தல் நடத்த தயாராக உள்ளோம்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
புதன் 13, மார்ச் 2024 5:14:17 PM (IST)
மக்களவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் ஆய்வு நடத்திய பிறகு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது: மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். அதற்கான பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஊடகப் பிரிவு ஏற்படுத்தப்படும். மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் மற்றும் சர்வதேச எல்லைகள் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.
ஜம்மு காஷ்மீரில் மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்படும். போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைவருக்கும் சமமான மற்றும் போதிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் 86.9 லட்சம் வாக்களார்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வியாழன் 22, ஜனவரி 2026 3:32:40 PM (IST)

தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: இபிஎஸ் குற்றச்சாட்டு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 10:22:25 AM (IST)

கனிம கொள்ளையை தடுக்க முடியாததால் திமுக நிர்வாகி விலகல்: அன்புமணி விமர்சனம்!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:35:21 PM (IST)

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:12:50 AM (IST)

அடுத்த முறையும் திராவிட மாடல் ஆட்சி தொடரும் : கனிமொழி எம்.பி நம்பிக்கை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:20:19 PM (IST)

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 8:29:15 PM (IST)









