» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மணிப்பூர் கலவரம்: இரு அவைகளிலும் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்: இந்தியா கூட்டணி

வியாழன் 20, ஜூலை 2023 4:10:01 PM (IST)



மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கிய கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ நேற்று இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்றே விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், "மே 3-ஆம் தேதி முதல் மணிப்பூரில் நடப்பது குறித்து இரு அவைகளிலும் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு தான் விவாதங்கள் நடைபெறும். இதுதான் அவையின் முதன்மை அலுவலாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

இவன்Jul 24, 2023 - 12:09:05 PM | Posted IP 162.1*****

பிஜேபி காங்கிரஸ் யாராக இருந்தாலும் பாதி வட நாட்டவன் எல்லாம் முட்டாள்

தமிழ்ச்செல்வன்Jul 22, 2023 - 11:26:23 AM | Posted IP 172.7*****

இன்று மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு இழைக்கப்பட்ட மான பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் கம்யூனிச பச்சோந்திகள் அன்று இலங்கையில் பலநூறு பெண்களை இன உறுப்புகளில் கத்தியால் குத்தி உயிர்வதை செய்து கொன்ற ராஜபக்ஷேவுக்கு துணை நின்ற காங்கிரஸ் - தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு வாய் திறக்காதது வெட்கக்கேடானது!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory