» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுகவை சீண்டினால் தாங்க மாட்டீர்கள்: பாஜகவுக்கு மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

வெள்ளி 16, ஜூன் 2023 10:27:34 AM (IST)

திமுகவை சீண்டாதீா்கள்’ என்று பாஜகவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததற்கு, தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்தக் கட்சியின் தமிழக துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: செந்தில்பாலாஜி மீது புதிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கடந்த மே 16-ஆம் தேதி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மேலும், இதில் ஏதாவது தவறு ஏற்படுமேயாயின் உச்ச நீதிமன்றமே ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கும் என்றும் குறிப்பிட்டது. அமலாக்கத் துறை தனது விசாரணையைத் தொடரலாம் என்றும், அரசுப் பணியில் இருப்பவா்கள் மீது சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குறித்த குற்றச்சாட்டு எப்போது பொதுவெளியில் வந்துவிட்டதோ, அது குறித்து முதல் தகவல் அறிக்கையை பதிய வேண்டியது அமலாக்கத் துறையின் கடமை என்றும் உத்தரவிட்டது.

தற்போது, யாருக்கு எச்சரிக்கை விடுக்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்துக்கா? இதய நோயை எவ்வாறு ஒரே நாளில் உருவாக்க முடியும்? 10 ஆண்டுகளுக்கு முந்தைய புகாா் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னது உச்சநீதிமன்றம் என்று தெரிந்தும், அநியாயமான தொல்லை கொடுக்கப்படுகிறது என்றெல்லாம் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் அளவுக்கு அப்படியென்ன செந்தில்பாலாஜி மீது பாசம்? எனப் பதிவிட்டுள்ளாா்.


மக்கள் கருத்து

இது தான் திராவிட நாடக மாடல்Jun 23, 2023 - 06:25:52 PM | Posted IP 162.1*****

மோடி தமிழகத்தில் வந்தால் சிவப்பு கம்பளம் விரித்து பூங்கொத்து கொண்டு வந்து அப்பனும் மகனும் குடும்பமும் விமான நிலையத்தில் வந்து வரவேற்பார்கள். அவ்வளவுதான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory